தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி - என்ன காரணம்?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2026 சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் வழக்கமான நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவப் பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளனர்.
மருத்துவர்கள் 2 நாட்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுரை கூறியதாக தகவல் வெளியான நிலையில், 22, 23 தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.