‘சமூகநீதியில் முதன்மையான தலைவர் எம்.ஜி.ஆர்.தான்’ - இந்திய பிரதமர் மோடி புகழாரம்

MGR tamilnadu Congratulations cm prime minister modi 105 birthday
By Nandhini Jan 17, 2022 04:20 AM GMT
Report

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்திருக்கிறார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105- வது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசுத் தரப்பிலும் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது'' என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார். 

‘சமூகநீதியில் முதன்மையான தலைவர் எம்.ஜி.ஆர்.தான்’ - இந்திய பிரதமர் மோடி புகழாரம் | Tamilnadu Cm Mgr 105 Birthday Prime Minister Modi