இனி அரசு அலுவலகங்களில் வைக்கப்படும் தமிழக முதல்வரின் படம் வெளியிடப்பட்டுள்ளது
தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ளது. இதன்படி முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் தேர்வானார். இதனையடுத்து தமிழக முதல்வராக மே 7ம் தேதி பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி அதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பது வழக்கம். அதுபோல தற்போது தமிழகத்தின் புதிய முதல்வரான முக ஸ்டாலின் அவர்களது அரசு அலுவலகங்களில் வைக்கப்படும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.