தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கைகோர்த்து களமிறங்கிய நடிகர் சூர்யா
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய்பீம்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், இப்படத்திற்கு இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘ஜெய் பீம்’ விவகாரத்தில் பாமகவினர் சூர்யாவை விடாது துரத்திக் கொண்டிருக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் கைகோர்த்து களமிறங்கியிருக்கிறார் நடிகர் சூர்யா.
பள்ளி மேலாண்மைக்குழு அமைக்க கடந்த 5 வருடமாக சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் விடாமுயற்சி எடுத்து வருகிறது.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அகரம் பவுண்டேசன் சார்பாக கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகனிடம் இது தொடர்பாக பேசியிருக்கிறார்கள். அவர் இதை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
திட்டத்தை கேள்வி பட்டதும் தமிழக முதலமைச்சர் அதற்கு சம்மதித்துள்ளார். இது குறித்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். கல்வித் துறை அமைச்சரும் இதற்கு சம்மதித்து. இதன் பின்னர் துரிதகதியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் 100 முன்கள பணியாளர்களை தேர்வு செய்து திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் கடந்த நவம்பர் 18 ,19, 20 ஆகிய மூன்று நாட்களில் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. அகரம் பவுண்டேஷன் தான் ஒருங்கிணைப்பு செய்துள்ளது.
3 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சிக் கூட்டத்தில் களப்பணியாற்ற ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். பயிற்சியின் தொடக்க நாளில் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கலந்து கொண்டுள்ளார்.
தேசிய இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் ராசு தன் 3 நாட்கள் பங்கேற்றிருக்கிறார் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கின்ற பணியில் பயிற்சி எடுத்துக்கொண்ட 100 பேரும் 4 குழுவாகப் பிரித்து நான்கு மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஆயிரம் பேரை தேர்வு செய்து மொத்தம் நாலாயிரம் பேருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 2022ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வேளாண்மை குழு அமைத்து சிறப்பாக செயல்பட வைக்க திட்டமிட்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சரின் இந்த முயற்சிக்கு ‘அகரம் பவுண்டேஷன்’ உறுதுணையாக இருக்கும் என்று சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.