PSBB பாலியல் புகார் விவகாரம் - பிரபல நடிகை அடித்த அந்தர்பல்டி!
விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் ‘96’. இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷா கேரக்டரில் நடித்தவர் தான் கௌரி கிஷன். அவர் ராஜகோபாலன் விவகாரத்தை கேள்விப்பட்டதும், தான் படித்த காலத்தில் அடையாறு இந்து சீனியர் செகண்ட்ரி பள்ளியில் நடந்ததை துணிச்சலாக சொன்னார்.
பிஎஸ்பிபி விவகாரத்தை விட, நடிகை கவுரி கிஷனின் சொன்ன பாலியல் புகார் தான் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேரவில்லை என்றும், தனது சக மாணவிகளுக்குத்தான் நேர்ந்ததாக கூறி அந்தர்பல்டி அடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கௌரி கிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில், பத்மா சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி. ) பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் வெடித்திருக்கும் நிலையில், அடையாறு இந்து ஸ்கூலில் படித்த நடிகை கவுரி கிஷன், பி.எஸ்.பி.பி. பள்ளி மாணவிகள் அனுபவித்தது போலவே, தானும் சக மாணவிகளும் அனுபவித்ததாக சொல்லி அதிர வைத்திருந்தார். படிக்கும் காலத்தில் இதை மனவலியுடன் பொறுத்துக்கொண்டதாகவும், தற்போது பிஎஸ்பிபி மாணவிகள் துணிச்சலாக வெளியே சொல்லி இருப்பதால் தானும் துணிச்சலாக சொல்லி இருப்பதாகவும் , இதனால் மனபாரம் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில், தற்போது அவர், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பி.எஸ்.பி.பி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
