கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்த பிரபல இயக்குநர் - குவியும் பாராட்டு!

tamilnadu-cinema
By Nandhini May 27, 2021 06:42 AM GMT
Report

கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் கட்டியுள்ள பிரபல இயக்குநர் லிங்குசாமியை சமூகவலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

திரைத்துறையில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வை முன்னிட்டு இயக்குநர் லிங்குசாமி கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றைக் காட்டியிருக்கிறார். இந்த ஆசிரமம் மணப்பாக்கத்தில் உள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், கொரோனா நோயாளிகளுக்காக மணப்பாக்கம் ஆசிரமத்தைத் திறக்க எங்களுக்கு உதவியதற்காக உதயநிதி ஸ்டாலின் சகோதரர், அமைச்சர் டி.எம்.அன்பரசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 20 ஆண்டுகளில் என்னை ஆதரித்த ஆர்பி சௌத்ரி சார், எனது தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. ஆனால் நாம் தற்போது கொண்டாடும் மனநிலையில் இல்லை. அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வது, இந்த தொற்றுநோயிலிருந்து மீள்வது தான் உண்மையான ஆனந்தம்.

ஊடக நபர்களுக்கும் அவர்களின் ஆதரவுக்காகவும் ஒரு சிறப்பு நன்றி. உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தொடக்க விழாவில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரம் கட்டியுள்ள பிரபல இயக்குநர் லிங்குசாமியை பாராட்டி பலர் சமூகவலைத்தளங்களில் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.