ஓபிஎஸ் வீட்டுக்கு திடீரென சென்ற தமிழக முதல்வர்! நடந்தது என்ன?
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அரசியல் கட்சிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தலில் போட்டியிட்டார்.
வாக்குப் பதிவுக்கு முடிந்த பின்னர் அவர் சேலத்திலேயே தங்கி, கட்சி நிர்வாகிகளை சந்தித்து சில முடிவுகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் மாமியார் வள்ளியம்மாள் படத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் பழனிசாமி சேலத்திலிருந்து இன்று தேனி புறப்பட்டுச் சென்றார்.
ஓ.பி.எஸ் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது மாமியார் படத்திற்கு முதல்வர் எடப்பாடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது ஓ.பி.எஸ் வீட்டுக்கு முதல்வர் பழனிசாமி சென்று, அவரது தாயாரிடம் ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.