போரூர் ஏரியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு
வழக்கமான அளவை விட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிந்ததால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று போரூர் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அங்குள்ள பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மழைநீர் செல்லக்கூடிய வரைபடங்களை காண்பித்து முதலமைச்சருக்கு விளக்கம் அளித்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து அருகே உள்ள மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்பை ஆய்வு செய்த பின்னர், அருகே இருக்கக்கூடிய தனலட்சுமி நகரில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
இதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.