பசுவை பாதுகாத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இடையே வந்த பசு மாட்டை அன்பாக சென்றுவிடும் என கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது திடீரென கூட்டத்திற்குள் புகுந்த பசுமாட்டைத் தொண்டர்கள் அடிக்க முயல, மாடு மிரண்டது. இதைக் கவனித்த முதல்வர் பழனிசாமி “அடிக்காதீங்கப்பா மாடு மிரளுகிறது பார், வழிவிடுங்க அது போய்விடும்” என்று அறிவுறுத்தினார்.
அதையும் மீறி சிலர் அடிக்க முயல, “அடிக்காதீங்கப்பா வழிவிடுங்க, அதுவா போய்விடும், பசுமாடு விவசாயிகளின் தெய்வம்” என்று பேசினார். பசுமாட்டுக்குத் தொண்டர்கள் வழிவிட அது முதல்வர் தயவால் அடி வாங்காமல் அங்கிருந்து சென்றது. இதனால் முதல்வரின் பேச்சைப் பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
பின்னர் முதல்வர் தனது பேச்சைத் தொடர்ந்தார். சாதாரண நிகழ்வு என்றாலும் சாலையை மறித்து கூட்டம் போடும்போது அங்கு உலாவும் விலங்குகள் கூட்டத்தில் சிக்கிக்கொள்வதும், அவற்றைத் தாக்குவதும் மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்று.
அதைக் கவனித்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அனுப்பி வைத்தது நல்ல முன்னுதாரணம். மற்ற கட்சித் தலைவர்களும் இதைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.