துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பு..!
Dubai
MKStalin
Tamilnadu
A. R. Rahman
Meet
ARRahman
ChiefMinister
DubaiExpo
By Thahir
துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று சந்தித்தார்.
தமிழகத்தில் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய் சென்றார்.
துபாய் சென்ற முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து அந்நாட்டின் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய அவர் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து இன்று துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சந்தித்து பேசினார்.