தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம்!
தமிழ்நாட்டில் முக்கிய காவல்துறை அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளனர்.
சென்னை நகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேற்று தமிழகத்தின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார்.
இதேபோல் தமிழக முதல்வரின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தொல்லியல்துறை ஆணையராக இருக்கும் உதயச்சந்திரன் முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இதேபோல் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் உமாநாத், முதல்வரின் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் மூன்றாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அருங்காட்சியங்கள் துறையின் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் என்ற பதவியில் அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது தொழில்துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்கள். ஐஏஏஸ் அதிகாரிகள் மட்டுமின்றி முக்கியமான ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை உளவுத் துறை ஏடிஜிபியாக கோவை மாநகர கமிஷ்னர் எஸ். டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக ஷங்கர் ஜிவால் நியமனம். இவர் இதுவரை சென்னை ஆயுதப்படை பிரிவின் ஏடிஜிபியாக இருந்தார். ஜெயந்த் முரளிக்கு பதிலாக சென்னை மாநகர சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.