தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?

Tamil nadu
By Karthikraja Jul 16, 2026 02:16 PM GMT
Report

 தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. 

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? | Tamilnadu Census What Are The 33 Question To Asked

மக்கள் தொகையின் அடிப்படையிலே, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி உதவி, நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுவதால் இது முக்கியமான ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? | Tamilnadu Census What Are The 33 Question To Asked

மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதில், குடும்ப தலைவர் எந்த ஜாதி, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளது? வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனர்? ஸ்மார்ட் போன், மடிக்கணினி உள்ளதா?, கார், பைக் உள்ளதா? இணைய இணைப்பு உள்ளதா? கழிவறை எந்த வகை?குடிநீர் ஆதாரம், உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்பட உள்ளது. 

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? | Tamilnadu Census What Are The 33 Question To Asked

சுய கணக்கெடுப்பு

சுயகணக்கெடுப்பு ஜூலை 17 ஆம் திகதி தொடங்கி ஜூலை 31 வரை நடைபெற உள்ளது.

இந்த முறை, விருப்பமுள்ளவர்கள் இணைய வழியில் se.census.gov.in என்ற இணையதளத்தில் சுய கணக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

இந்த சுயகணக்கெடுப்பில் பங்குபெற்று வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு ஒரு சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) திரையில் தோன்றும். அதனை சேமித்து வைத்து, வீட்டிற்கு வரும் கனெக்கெடுப்பாளர்களிடம் காண்பித்தால் மீண்டும் அவர்களிடம் 33 கேள்விகளுக்கும் பதிலளிக்க தேவையில்லை.