தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jul 22, 2023 05:29 AM GMT
Report

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது | Tamilnadu Cabinet Meeting Started

அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் ஏற்கனவே கோரிக்கை வைத்து.

இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயல்பாடு உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க, தொழில் நிறுவன விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.