தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
decisions taken on tamilnadu cabinet meeting: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் 3வது அமைச்சரவை கூட்டம் ஆகும்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம்
இந்த கூட்டத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமிற்கோ மதம் மாறினால் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழம்பூர் கிராம மக்களுக்கு அவர்களின் நிலம் ஒப்படைக்கும் பொருட்டு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சமூக நீதி ஆணையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் அது முடிந்தபிறகு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக நீதி ஆணையம் அமைத்து கணக்கெடுப்பு நடைபெறும்.
மேலும், "மக்களுக்கு என்ன தேவையோ அதற்குத்தான் அமைச்சர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் அனைவவரும் செயல்பட வேண்டும்.
மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்சினை, சாலை வசதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், டெண்டர் விவகாரங்களில் அமைச்சர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். கமிஷன் FREE கரப்ஷன் FREE என்பதில் அமைச்சர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சம் புகுந்த தமிழர்களை சிங்கள அரசின் பாணியில் கையாளும் திருச்சி சிறப்பு முகாம்: கௌதமன் ஆதங்கம் IBC Tamil
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இஸ்ரேல் தேர்தல்: நெசெட் நாடாளுமன்றத்தின் பின்னணி IBC Tamil