நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Government of Tamil Nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 19, 2026 01:18 PM GMT
Report

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு? | Tamilnadu Cabinet Expansion Who Will New Ministers

விஜய் உடன் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். சமீபத்தில் இவர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது. 

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு? | Tamilnadu Cabinet Expansion Who Will New Ministers

இன்னும், உயர்கல்வி துறை, போக்குவரத்து துறை, பால்வள துறை, வேளாண் துறை, வணிகவரித்துறை, அறநிலையத் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. 

கேரளாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழா முடிந்து, நாளை ஆளுநர் தமிழ்நாடு திரும்ப உள்ள நிலையில், நாளை மறுநாள்(21.05.2026) தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் அமைச்சராக கீர்த்தனா மட்டுமே உள்ள நிலையில், திருப்பூர் எம்எல்ஏ சத்யபாமா, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு? | Tamilnadu Cabinet Expansion Who Will New Ministers

மேலும், முஸ்லீம் ஒருவர் கூட இல்லாத நிலையில், மதுரையில் முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வீழ்த்திய முஸ்தபா, முன்னாள் அமைச்சர் காந்தியை வீழ்த்திய தாஹீரா, அறந்தாங்கி எம்எல்ஏ முகமது பர்வேஸ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு? | Tamilnadu Cabinet Expansion Who Will New Ministers

மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை கொளத்தூரில் வீழ்த்திய வி.எஸ் பாபு, ஆர்.கே. நகர் எம்எல்ஏ மரிய வில்சன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ், சேலம் தெற்கு எம்எல்ஏ தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

5 எம்எல்ஏக்களை வைத்துள்ள கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.