பேருந்தில் பயணிக்கும்போது பெண்களை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது - தமிழக அரசு
பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அந்த அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது -
பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது.
பெண் பயணிகளிடம் அத்துமீறும் ஆண்களை உடனடியாக அரசு வாகனத்திலிருந்து நடத்துனர் இறக்கி விடலாம். அரசு பேருந்தில் ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை போன்றவற்றை செய்யக்கூடாது.
நடத்துனர் எச்சரிக்கையையும் மீறும் ஆண் பயணிகளை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்து விடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.