இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்!

lockdown bus allowed 4 districts
By Anupriyamkumaresan Jun 21, 2021 03:07 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கத்தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்! | Tamilnadu Bus Allowed Lockdown 4 Districts

இதன்படி, முதல்கட்டமாக 1,400 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துகக்ழகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெட்ரோ ரயில்கள் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலையில் 5 நிமிட இடைவெளியிலும் பிற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  

இன்று முதல் அமலானது புதிய தளர்வுகள் - 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்! | Tamilnadu Bus Allowed Lockdown 4 Districts