தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் 18-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் மார்ச் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 - 23 ஆம் ஆண்டிற்காண காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18-ந் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும்,பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.