மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

minister bjp finance
By Jon Feb 02, 2021 12:31 PM GMT
Report

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கான முக்கிய அறிவிப்புகள் சில, தமிழ்நாட்டில் 3,500 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு

சென்னையில் 119 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,246 கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் மதுரை - கொல்லம் இடையே பொருளாதார மண்டல வழித்தடம்;

கட்டுமான பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் சென்னை,

கொச்சி உள்பட 5 நகரங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு கன்னியாகுமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும். தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்.