தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 23 - பெரியாரின் சிந்தனை தொகுப்பு புத்தகத்தை வெளியிட ₹5 கோடி ஒதுக்கீடு

Book பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 23 Tamilnadu Budget 2022-23 Periyar's thought 5 crore allocation பெரியாரின் சிந்தனை ₹5 கோடி ஒதுக்கீடு
By Nandhini Mar 18, 2022 05:32 AM GMT
Report

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை குறித்த புத்தகம் இல்லாமல் இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பட்ஜெட்டில் பெரியாரின் எழுத்துக்களை எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 23 - பெரியாரின் சிந்தனை தொகுப்பு புத்தகத்தை வெளியிட ₹5 கோடி ஒதுக்கீடு | Tamilnadu Budget 2022 23 Periyar S Thought Book