லஞ்சப் புகார்களுக்கு வாட்ஸ்அப் வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) அறிவித்துள்ளது.
மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மூலமாகவும் புகார்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலாளர் சுற்றறிக்கை
அதேபோல், சென்னை ஆலந்தூரில் உள்ள இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனுடன், "லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்" என்ற விழிப்புணர்வு அறிவிப்புப் பலகையை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இதை அனைத்து துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.