அதிமுக கொடி சர்ச்சை.. சசிகலா கார் மாறியதால் தமிழக எல்லையில் பரபரப்பு.!
பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் வந்து கொண்டிருந்த சசிகலா தமிழக எல்லையில் வேறு காருக்கு மாறினார். சசிகலா வருகையால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து பெங்களூரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே சசிகலா தனது காரில் அதிமுக கொடி பயன்படுத்தியது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். சசிகலா தமிழகம் வரும் போது அவர் தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி பகுதிக்கு வந்த சசிகலா கார் மாறினார்.
ஜெயலலிதாவின் காரை அவர் பயன்படுத்தி வந்த நிலையில் அதிலிருந்து வேறு காருக்கு மாறி அவர் பயணிக்க தொடங்கினார்.
அதிமுக கொடியை பிடிக்க கூடாது, அமமுக கொடியை பிடிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக கொடிகளை போலீஸார் கீழே இறக்கினர்.