கோவையில் 6 பேருக்கு கரும்பூஞ்சை உறுதி! கலெக்டர் நாகராஜன் தகவல்
கோவையில் 6 பேருக்கு கரும்பூஞ்சை உறுதியாகி இருப்பதாக கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, இது ஒரு புறம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் வேளையில், தற்போது கொரோனா நோயாளிகளைத் கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்கி வருகிறது. இது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான நோய் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் தொற்று மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் கூறுகையில், கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது. இந்த 6 பேரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.