கொரோனாவைத் தொடர்ந்து அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை - அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

tamilnadu-black-fungus
By Nandhini May 20, 2021 05:21 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிகளவில் பரவி வருகிறது. இது ஒருபக்கம் மக்களை வாட்டிவதைத்து வர, தற்போது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் வந்தவர்களுக்கு கண்ணை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.அத்துடன் நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்கக்கூடியது.

இது குறித்து, தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பி தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அரவிந்த் கண் மருத்துமனையில் இருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கே 50 டோஸ் மருந்து தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான மருந்து சப்ளையர்கள் குறைவாகவும், தேவை அதிகமாகும், விலை அதிகபட்ச விலையையும் கொண்டுள்ளது. தயவுசெய்து மாஸ்க் அணிந்து, தனிமைப்படுத்தி கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனாவைத் தொடர்ந்து அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை - அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்! | Tamilnadu Black Fungus

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கியுள்ளது. இதனையடுத்து, இவர்கள் எழும்பூர் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.