மத்திய அரசுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் இணக்கமாவார் - அண்ணாமலை

BJP tamilnadu Annamalai CM-Stalin
By Nandhini Mar 11, 2022 04:55 AM GMT
Report

 நேற்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

நேற்று உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வென்று ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியமைத்து, 2 வரலாற்று சாதனைகள் நிகழ்த்தியது.

இந்த சட்டமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடித்தளம் என்பதால் இந்தியா முழுவதுமுள்ள மக்களால் உற்று நோக்கப்பட்டது.

உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் நேற்று மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் இறங்கினார்கள்.

இந்நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.       

மத்திய அரசுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் இணக்கமாவார் - அண்ணாமலை | Tamilnadu Bjp Annamalai Stalin