மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார் - அண்ணாமலை
மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "மற்ற கட்சிகளின் உட்கட்சி பிரச்சினைகளில் பாஜக எப்போதும் தலையிடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
ஓ.பி.எஸ் பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். கூட்டணி தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
ஆலோசனை
மேலும், நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். சென்னையில் நாங்கள் கெட்ட பெயர் வாங்க விரும்பவில்லை.
‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாளை சென்னை வரும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.