தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

tamilnadu-birthday-politics
By Nandhini Aug 17, 2021 05:38 AM GMT
Report

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

1999-ம் ஆண்டு தொடங்கிய திருமாவின் அரசியல் பயணம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. தொல்.திருமாவளவன் எம்எல்ஏ, எம்.பி. என பொறுப்பு வகித்து வருகிறார். இவர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், “திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.