சென்னை கலைவானர் அரங்கில் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவானர் அரங்கில் இன்று காலை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ரவி வணக்கம் தெரிவித்து சட்டப்பேரவையில் தன் உரையை தொடங்கினார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ரவி வணக்கம் தெரிவித்து சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார்.
முதல்முறையாக இசைத்தட்டுக்கு பதில் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஜார்ஜ் கோட்டையில் இருந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டார்.