தமிழகத்தில் பிப்ரவரி 5ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்

election political governor
By Jon Feb 02, 2021 11:20 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோதல் சில மாதங்களில் நடைபெற உள்ள அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் கலைவாணா் அரங்கில் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இதில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஆளுநர் உரை பிற்பகல் முடிந்த நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின், அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவா் தனபால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.