திமுக அரசு பதவியேற்பு - முதல் சட்டப்பேரவை கூட்டம் மே 11-ம் தேதி கூடுகிறது

Tamil Nadu Stalin Assembly
By mohanelango May 08, 2021 10:31 AM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை உடன் வென்று ஆட்சி அமைக்கிறது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது.

இந்நிலையில் வரும் 11-ம் தேதி புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். சட்டப்பேரவை செயலர் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது.