சட்டப்பேரவை கூட்டத்தொடர் - 2023 : புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள் காரணம் என்ன?
2023ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
சட்டப்பேரவை
நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று காலை தொடங்குகிறது. காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் ஆளுநர் உரை வாசிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ஆளுநர் வாசிக்கும் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு மொழிபெயர்க்கிறார்.
ஆளுநர் உரை
ஆளுநர் உரைக்குப்பின் இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்படும். அரசு நல திட்டங்கள் , மாநிலத்தில் செயல்படுத்த உள்ள முக்கியத்திட்டங்கள் குறித்து ஆளுநர் விவாதிக்க உள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கண்டித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மற்றும் தமிழ்நாடு குறித்து ஆளுநர் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.