தமிழகத்தில் வருகிற 25ந் தேதி துணை இராணுவப் படை வருகை
people
government
election
By Jon
தமிழகத்தில் வருகிற 25ந் தேதி துணை இராணுவப் படை வருகைத் தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.
சட்டப் பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி சென்னையில் ஆஜராக மத்திய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மத்திய ஆயுதப்படையின் 45 மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.