சிறப்பு பேருந்துகள் எந்த ஊருக்கு, எப்போது இயக்கப்படுகிறது? முழு விவரம்.!

Corona Lockdown Stalin Tamil nadu
By mohanelango May 22, 2021 11:03 AM GMT
Report

தமிழகத்தில் மே மாதம் 24-ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக 4500 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மொத்தமாக தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பாக 4500 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருப்பூர் மற்றும் முக்கிய நகரங்கள் இடையே பயணிகளின் வசதிக்காக 3000 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் இடங்களில் அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோயம்பேடு தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில் சென்னை மாநகர பேருந்து சார்பாக பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் திருச்சிக்கு நாளை இரவு 11.45 க்கு கடைசி பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு நாளை இறுதி பேருந்து 7 மணிக்கு இயக்கப்படுகிறது.

திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலிக்கு நாளை இரவு 8 மணிக்கு இறுதி பேருந்து இயக்கப்படுகிறது. நாளை மதுரைக்கு இறுதி பேருந்து 11.30 மணிக்கு இயக்கப்படுகிறது.