5 ஓட்டுகள் மட்டுமே பெற்ற அமமுக வேட்பாளர் - எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலை முயற்சி

tamilnadu ammk-candidate attempted-suicide
By Nandhini Feb 23, 2022 09:50 AM GMT
Report

கடந்த 19ம் தேதி நகர்ப்புற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தல் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டில், அமமுக சார்பில் பெண் வேட்பாளர் ராமஜெயம் போட்டியிட்டார். ஆனால், இவர் இத்தேர்தலில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

5 ஓட்டுகள் மட்டுமே கிடைத்து தோல்வி அடைந்ததால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

5 ஓட்டுகள் மட்டுமே பெற்ற அமமுக வேட்பாளர் - எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலை முயற்சி | Tamilnadu Ammk Candidate Attempted Suicide

கடும் விரக்தியில் இருந்து வந்த அவர், எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் ராமஜெயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்த அமமுக வேட்பாளர் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.