5 ஓட்டுகள் மட்டுமே பெற்ற அமமுக வேட்பாளர் - எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலை முயற்சி
கடந்த 19ம் தேதி நகர்ப்புற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தல் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டில், அமமுக சார்பில் பெண் வேட்பாளர் ராமஜெயம் போட்டியிட்டார். ஆனால், இவர் இத்தேர்தலில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
5 ஓட்டுகள் மட்டுமே கிடைத்து தோல்வி அடைந்ததால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
கடும் விரக்தியில் இருந்து வந்த அவர், எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் ராமஜெயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்த அமமுக வேட்பாளர் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.