டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 68 ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள் சென்னைக்கு வந்தன!
டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 3 டன் (3 ஆயிரம் கிலோ) எடையுடைய 68 ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள், 45 வெண்டிலேட்டா்கள், 2 லட்சம் முகக்கவசங்கள், ஒரு லட்சம் RT-PCR Kits மற்றும் மருத்துவ உபகரணங்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தன.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு தடுப்பூசிகள் போடுவதைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது.
மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஆக்ஜிசன், வெண்டிலேட்டா் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிலுருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தமிழகத்திற்கு பெருமளவு வர வழைத்து வருகிறது.
இதனையடுத்து, டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்கள் 3 டன் மருத்துவ உபகரணங்களுடன் சென்னை பழைய விமானநிலையம் வந்து சேர்ந்தன. இரு விமானங்களிலும் 68 ஆக்ஜிசன் உற்பத்தி கருவிகள், 45 வெண்டிலேட்டா்கள், 2 லட்சம் முகக்கவசங்கள், ஒரு லட்சம் கொரோனா பரிசோதனை RT-PCR Kits மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்து இறங்கின.
அதன் பின்பு விமானப்படை வீரா்கள் கண்காணிப்பில், இந்தியன் ஏா்லைன்ஸ் லோடா்கள் மருத்துவ உபகரணங்களை இறக்கி சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கொடுத்தனா். அவா்கள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அதன் பின்பு தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அடுத்த சில தினங்களில் மேலும் சில விமானங்களில் டெல்லி, நாக்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு தமிழகம் வரவிருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan