மே 10ம் தேதிக்கு பின் என்ன நடக்கும்?
தமிழக வெற்றி கழகத்துக்கு இதுவரையிலும் ஆதரவு கட்சிகளை சேர்த்து 116 எம்எல்ஏ-க்கள் உள்ள நிலையில் இன்று விசிக எடுக்கப்போகும் முடிவு குறித்து தெரியவரும்.
தொல். திருமாவளவன் இன்று ஆதரவை வழங்கினால் ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுக்கலாம், அது நடக்காத பட்சத்தில் மே 10ம் தேதிக்கு பின்னர் என்ன நடக்கலாம் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
அதாவது,
16வது சட்டமன்றத்தின் பதவிக் காலம் மே 10-வுடன் முடிவடைகிறது, அதற்குள் ஆதரவை நிரூபித்து ஆட்சியமைக்க வேண்டும், அதுநடக்காத பட்சத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுலுக்கு வரும், இது 6 மாதங்களுக்கு நீடிக்கும், குடியரசு தலைவர் ஆட்சியில் ஆளுநர் மேற்பார்வையில் தமிழகம் செயல்படும், இது பாஜகவே ஆட்சியமைப்பது போன்றதாகும் என கூறப்படுகிறது.