அதிகாலையில் நடந்த துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி
தமிழகத்தில் பல் மருத்துவ கல்லூரியில், மகளை சேர்ப்பதற்கு சென்றபோது நடந்த சாலை விபத்தில் தாய், தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே விருத்தாசலம்- சேலம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் சனிக்கிழமை அதிகாலை புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரியா( 43), இவரது மகன் அபிஷேக்( 16 )ஆகிய இருவரும் உயிரிழந்தனர். பிரியாவின் கணவர் சௌந்தரராஜன் (45), மகள் எஸ்வந்தநினி (18) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், சிகிச்சை பலனின்றி சௌந்தரராஜன் உயிரிழந்தானர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கீழ்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.