தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Indian fishermen Ramanathapuram
By Jiyath Aug 08, 2023 06:05 AM GMT
Report

தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் கைது

கடந்த 25ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இயங்குதளத்திலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 400 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு! | Tamilnadu 9 Fishermen Freed Srinlankan Court

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 மீனவர்களை கைது செய்தனர். மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட மீனவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

விடுதலை

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 9 மீனவர்களையும் பல்வேறு நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.