தமிழகத்தில் இதுவரை 272 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன

272 lakes filled
By Anupriyamkumaresan Nov 08, 2021 03:39 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

 கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 138 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 89 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 138 ஏரிகள் 100 சதவிகிதமும், 88 ஏரிகள் 75 சதவிகிதமும், 48 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ஏரிகள் 100 சதவிகிதமும், 99 ஏரிகள் 75 சதவிகிதமும்,140 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் இதுவரை 272 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன | Tamilnadu 272 Lakes Dams Filled Public Fear

திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும், 34 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 272 ஏரிகள் 100 சதவிகிதமும், 205 ஏரிகள் 75 சதவிகிதமும், 234 ஏரிகள் 50 சதவிகிதமும் மீதமுள்ள 188 ஏரிகள் 25 சதவிகிதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.