காமராஜர் மணிமண்டபம் – நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

tamilnadu
By Nandhini Jan 11, 2022 10:48 AM GMT
Report

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.23 கோடி செலவில் திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (12.01.2022) காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

சுமார் 1,000 பேர் அமரும் வசதி கொண்ட இந்த மண்டபம் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுச்சேரியில் ரூ.122 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு உள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதனையைடுத்து, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.