எம்ஜிஆருக்கு தன் கிட்னியை தானமாக கொடுத்த அண்ணன் மகள் லீலாவதி உயிரிழந்தார்
எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி. இவர் உடல்நிலை சரியில்லாமல் அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் உடல்நிலை மோசமடைந்தார். அதன் பிறகு அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அப்போது, லீலாவதி தனக்கு திருமணம் ஆகியிருந்தாலும், தனது கணவனின் அனுமதியுடன் அவரது சித்தப்பாவான எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்தார். அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்ட பிறகு, லீலாவதியின் சிறுநீரகம் எம்ஜிஆருக்கு பொருத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த லீலாவதி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.