பிக்பாஸ் புகழ் ஆரவ்விற்கு குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்துக்கள்
tamilnadu
By Nandhini
தற்போது பிக்பாஸ் சீசன் 5, பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் ஆரவ். இவர் பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளராக வாகை சூடினார் ஆரவ்.
இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனையடுத்து, நிறைய படங்களில் நடித்து வருகிறார் ஆரவ். இவர் ராஹே என் நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ஆரவ்விற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், தாய்யும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஆரவ்விற்கு அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.