மழை பாதிப்பை ஆய்வு செய்த மத்தியக்குழு - இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை
2 நாட்களாக மழை பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக்குழு இன்று தமிழக முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி இருப்பதால், கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மத்திய குழு, பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இச்சந்திப்பின் போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிய நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியக் குழுவிடம் வலியுறுத்த இருக்கிறார்.