கனமழை எச்சரிக்கை - கலெக்டர்களுடன் தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை
tamilnadu
By Nandhini
கனமழை எச்சரிக்கை தொடர்பாக, இன்று மாவட்ட கலெக்டர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, 'நாளை முதல் 3 நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மழையை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 11:00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.