சர்வதேச பேஷன் ஷோ - தமிழ்நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் பங்கேற்பு - குவியும் வாழ்த்து

tamilnadu
By Nandhini Nov 22, 2021 11:39 AM GMT
Report

சர்வதேச பேஷன் ஷோவில் தமிழ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் கலந்து கொள்ள போகும் தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோவையைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 6 வயதில் ராணா என்கிற மகன் உள்ளார். ராணாவின் தந்தை துணிக்கடையும், தாயார் அழகு நிலையமும் நடத்தி வருகிறார்கள்.

கோமதியின் அழகு நிலையத்திற்கு ஓராடை வடிவமைப்பாளர் ஒருவர் வந்தார். அப்போது, சிறுவன் ராணாவை பார்த்த அவர் உங்கள் மகனை ஏன் பேஷன் ஷோவில் பங்குபெற வைக்க கூடாது என்று கேட்டுள்ளார்.

இது குறித்த யோசித்த பெற்றோர், தன் மகனை இதில் பங்குபெற வைக்க நினைத்து கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொள்ள வைத்தார்கள். 3 வயதிலேயே கலந்து கொண்ட முதல் ஷோவிலேயே சிறுவன் பரிசை தட்டிச் சென்றான். இதனால், பெற்றோர்களுக்கு பெரும் நம்பிக்கை வந்தது.

இதனையடுத்து, சென்னை, கோவை, சேலம், பெங்களூரு, கோவா போன்ற இடங்களில் நடைபெற்ற ஜூனியர் பேஷன் ஷோக்களில் ராணாவை பங்குபெற செய்தார்கள். ராணாவும் அனைத்து போட்டிகளிலும் பரிசை தட்டிச் சென்றான்.

இதுவரை நடந்த அனைத்து போட்டிகளின் மூலம் 13க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றிருக்கிறான். நாளை துபாயில் நடக்க உள்ள சர்வதேச பேஷன் ஷோவில் இச்சிறுவன் பங்கு பெற உள்ளான். இந்த பேஷன் ஷோக்களில் 15 உலக நாடுகளை சேர்ந்த மாடல்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில், ராணாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சர்வதேச பேஷன் ஷோ - தமிழ்நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் பங்கேற்பு - குவியும் வாழ்த்து | Tamilnadu