அமைச்சரவை கூட்டம் 20ம் தேதிக்கு மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 20ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19- 11- 2021) மாலை 5.00 மணியளவில் கூட்டப்படும். இந்நிலையில், தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு 20-11-2021, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.