அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தை புரட்டிப்போட உள்ள கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

tamilnadu
By Nandhini Nov 11, 2021 03:11 AM GMT
Report

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு -

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சென்னையில் இடைவிடாமல் தொடர் கனமழை பெய்து வருகிறது. நகரின் மையப்பகுதியான வடபழனி ,கோடம்பாக்கம்,தியாகராய நகர் ,நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு ,வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழையானது தற்போது வரை நீடித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. குறிப்பாக பெசன்ட் நகர் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அத்துடன் கனமழையால் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்த 3 மணி நேரத்திக்குள் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,ராணிப்பேட்டை, வேலூர் ,திருவண்ணாமலை, குமரி ,நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தை புரட்டிப்போட உள்ள கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Tamilnadu