தமிழக முதலமைச்சருக்கு அம்பேத்கர் சுடர் விருது – விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

tamilnadu
By Nandhini Nov 10, 2021 04:41 AM GMT
Report

இந்தாண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கார் சுடர் விருது வழங்கப்பட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆண்டு தோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் அவ்வாறு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்தாண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இந்தாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமாலுக்கும், காயிதேமில்லத் பிறை விருது அல்ஹாஜ் மு.பஷீ்ர் அகமதுக்கும், செம்மொழி ஞாயிறு விருது செம்மொழி க.இராமசாமிக்கும் வழங்கப்பட இருக்கிறது.

இதோ அந்த பதிவு -