14 சுரங்கப் பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றம் - சென்னை மாநகராட்சி பணிகள் மும்முரம்

tamilnadu
By Nandhini Nov 10, 2021 03:19 AM GMT
Report

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றப்பட்டிருக்கிறது. டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 14 சுரங்கப் பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டிருக்கின்றன.

தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்மழை காரணமாக சென்னையில் விழுந்த 116 மரங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 7180 புகார்களில் 3593 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 61 முகாம்களில் 1343 பேர் தங்கி இருக்கிறார்கள். இன்று காலை வரை சென்னை மாநகராட்சி முழுவதும் 6,25,400 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

14 சுரங்கப் பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றம் - சென்னை மாநகராட்சி பணிகள் மும்முரம் | Tamilnadu